தமிழகம்

சேலம் சிறையில் கைதி தற்கொலை

செய்திப்பிரிவு

சேலம் மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் அஜீத்குமார்(23). இவர் வழிப் பறி வழக்கில், கடந்த அக்டோ பர் மாதம் 24-ம் தேதி திருச்செங் கோடு புறக்காவல் போலீ ஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் 8-வது பிளாக்கில் 11-வது அறையில் அடைக்கப் பட்டிருந்த அஜீத்குமார், நேற்று மதியம் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிறைத் துறையினர் அஜித்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஸ்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT