கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடையதாக இரண்டு பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் துடியலூ ரில் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சி.சசிகுமார் கொலை செய் யப்பட்டார். இதுகுறித்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கொலை தொடர்பாக கோயம்புத்தூர் சாய்பாபா காலனி சதாம் உசேன், அதே பகுதியை சேர்ந்த முபாரக் இருவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க முயன் றனர். ஆனால், 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் 2 பேரும் கோயம் புத்தூர் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத் தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவல கத்தை நேரடியாக அணுகலாம்.
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பொது மக்களும் இங்கு வந்து தகவல் தெரிவிக்கலாம்.
சசிகுமார் கொலை தொடர்பான தகவல் ஏதேனும் கிடைத்தால் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வி.எஸ்.எஸ். ஆனந்த் ஆரோக் கியராஜுக்கு (94981 74230, 0422 2241752) தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.