சென்னை: மதுரவாயல் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து, லாரியின் கீழ் சிக்கி இளம் பெண் உயிரிழந்தார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஷோபானா (22). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது தம்பியை பள்ளியில் விடுவதற்கு மதுரவாயல் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியில் சிக்கி ஷோபானா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தம்பி காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த வழக்கில் 2 ஓட்டுநர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.