தொலைத் தொடர்பு சேவை 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டதால் அவசர உதவிக்குகூட யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
‘வார்தா’ புயலால் சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல மின்மாற்றிகள் மீதும் மரங்கள் விழுந்தன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் 2-வது நாளாக நேற்றும் பல இடங்களில் மின் விநியோகம் இல்லை.
புயல் காற்றால் பல செல்போன் கோபுரங் களின் கேபிள்கள் சேதமடைந்தன. இதன்கார ணமாகவும், மின் விநியோகம் இல்லாததாலும் தொலைத் தொடர்பு சேவை 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. செல்போன்களில் சிக்னல் கிடைக்காததால், அவசர உதவிக்குக்கூட தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.