மதுரையில் மதுரை ரயில்வே  கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், கோட்ட அதிகாரிகள்  பங்கேற்ற  ரயில் பாதுகாப்பு கூட்டத்தில் ரயில் விபத்து தவிர்க்க காரணமாக இருந்த சூர்யா என்பவரை பாராட்டி, பரிசு வழங்கினார். 
தமிழகம்

ரயில் விபத்தை தடுக்க உதவிய சமயநல்லூர் இளைஞருக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டு

என்.சன்னாசி

மதுரை: மதுரை அருகே ரயில் விபத்தை தடுக்க, உதவிய இளைஞரை ரயல்வே கோட்ட மோலளர் பரிசு வழங்கி பாராட்டினார்.

சமயநல்லூர் - கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசிப்பவர் சூர்யா. இவரது தந்தை சுந்தர மகாலிங்கம். டிசம்பர் 15ம் தேதி காலை 8 மணியளவில் தனது வீட்டு அருகே உள்ள ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதை சூரியா தெரிந்து கொண்டார். அதுபற்றி தெரியாமல் தனது செல்போனில் படமெடுத்தார்.

பின்னர், அந்தப் புகைப்படத்தை 500 மீட்டர் தூரத்திலுள்ள ரயில்வே கேட்டில் பணியாற்றும் பீட்டர் என்பவரிடம் காண்பித்தார். பீட்டர் உடனே சமயநல்லூர் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தார். நிலைய அதிகாரி அந்த நேரத்தில் மதுரை செல்ல வேண்டிய திண்டுக்கல் - மதுரை விரைவு ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.

இந்நிலையில், சூர்யாவின் சமயோசித செயலை பாராட்டி, அவருக்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ரூ.5000 ரொக்கப் பரிசு வழங்கினார். கோட்ட அதிகாரிகள் பங்கேற்ற ரயில் பாதுகாப்பு கூட்டத்தில் வைத்து இப்பரிசு வழங்கப்பட்டது.

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, சூர்யாவின் தந்தை சுந்தர மகாலிங்கம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT