தமிழகம்

சென்னை - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில்

செய்திப்பிரிவு

சென்னை திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜனவரி 6-ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06001) மறுநாள் மதியம் 12.40 மணிக்கு திருநெல்வேலியை சென்ற டையும்.

இதேபோல், திருநெல்வேலியில் இருந்து வரும் ஜனவரி 8-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06002) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT