முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் திடீர் மறைவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 6, 7, 8 ஆகிய 3 நாட்கள் (செவ்வாய், புதன், வியாழன்) விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 3 நாள் விடு முறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரி கள் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி 10-ம் அரையாண்டு தேர்வுகள் இன்று தொடங்கும். அதுபோல இன்று நடைபெற வேண்டிய 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வும் இன்று நடக்கும். கடந்த 7,8-ம் தேதிகளில் நடைபெறவேண்டிய தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
ஏற்கெனவே அறிவிக் கப்பட்டபடி 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் இன்று தொடங்கும். அதுபோல இன்று நடைபெற வேண்டிய 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வும் இன்று நடக்கும். கடந்த 7,8-ம் தேதி களில் நடைபெறவேண்டிய தேர்வுகள் பின்னர் நடத்தப் படும் என்று எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.