மதுரை: பணியே செய்யாமல் பணிகளை முடித்ததாக கூறி, பணத்தை முறைகேடு செய்ததாக தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மாத்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆதிதிராவி டர் காலனி பகுதிக்கு தண்ணீர் பற்றாக் குறையைப் போக்க ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், பணியைமேற்கொள்ளாமலேயே செய்து முடித்ததாக லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் அரசுத் தரப்பில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.