‘வார்தா’ புயலால் காசிமேட்டில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், ஏராளமான படகுகள் சேதம் அடைந்துள்ளன.
கடந்த திங்கள்கிழமை சென் னையை தாக்கிய ‘வார்தா’ புயல் காசிமேட்டில் உள்ள மீனவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புயலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து, காசிமேட்டை சேர்ந்த மீன்பிடி படகு உரிமை யாளரான செந்தில் கூறும்போது, “காசிமேட்டில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகு கள் உள்ளன. சமீபத்தில் வீசிய புயலால் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நீரில் மூழ்கி யுள்ளன. மேலும், ஏராளமான படகுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
ராஜன் என்ற மீனவர் கூறும் போது, “புயலால் எங்களுடைய படகுகள் சேதம் அடைந்துள்ளன. தண்ணீரில் மூழ்கிய படகுகளை மீட்க அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு எவ்வித உதவி யும் கிடைக்கவில்லை. நாங் களே ஜேசிபி இயந்திரம் மூலம் அவற்றை மீட்டு வருகிறோம். கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த படகுகளும் சேதம் அடைந்துள்ளன. இவற்றை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என தெரிகிறது. அத்துடன் கடந்த 3 நாட்களாக மீன்பிடி தொழிலுக்குச் செல்ல முடியவில்லை.
மேலும், சேதம் அடைந்த படகுகளை சரி செய்து மீண்டும் தொழிலுக்குச் செல்ல குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதுவரை எங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். மேலும், மீன்களின் விலையும் உயரும் நிலை ஏற்படும். இதனால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.