கரூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலை செய்யப் பட்ட வழக்கில், இளைஞருக்கு அவரது ஆயுள் உள்ளவரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பிச்சம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்கு உதவியாக இருக்கும் என விடுமுறையில் வீரராக்கியத்தில் உள்ள தனியார் கொசுவலை நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவந்தார்.
2014-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி வேலைக்குச் சென்ற இவர் நீண்ட நேரமாகி யும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரைத் தேடியபோது கிருஷ்ணராயபுரத் தில் இருந்து பிச்சம்பட்டி செல்லும் சாலையில் உள்ள வெற்றிலைக் கொடிக் காலில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் அந்த இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இந்த வழக்கில் திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்த ஸ்பிளண்டர் ராமச் சந்திரன்(33) என்பவரை 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி மாயனூர் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கொலை சம்பவத்தை மறைத்து, கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து ராமச்சந்திரனுக்கு பணம் பெற்றுக்கொடுத்த லாலாபேட் டையைச் சேர்ந்த மணிகண்டன்(27) என்பவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம், பெண்ணைக் கடத்தியது, நகைகளைக் கொள்ளையடித்தது ஆகியவற்றுக்காக ராமச்சந்திரனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்ததுடன், கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தது.
பாலியல் வன்கொடுமை செய்ததற் காக போக்சோ (குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும்) சட்டம் 2012-ன் கீழ், ராமச்சந்திரன், அவரது இயற்கையான வாழ்நாளில், எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவும் அத்து டன் ரூ.1,000 அபராதம் விதித்தும் இவை யனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மணிகண்டனுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.