அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து குடியிருக்கும் மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற் றக்கூடாது என்பதை வலியுறுத்தி பல்லாவரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பல்லாவரம் அடுத்த அனகா புத்தூரில் அடையாறு ஆற்றங் கரையை ஒட்டிய பகுதியில் ஆக் கிரமித்து வீடுகள் கட்டப்பட் டுள்ளது. தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பொதுப்பணித் துறையினர் சார்பில் வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் சார்பில் பல்லாவரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு போராட்ட குழு சங்க தலைவர் மாரி ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை தேமுதிக முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் தொடங்கி வைத்தார். மதிமுக மாவட்ட செயலாளர் மகேந்திரன், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பாலன் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.