எப்.எம்.களில் ஒலிபரப்பாகும் அரசு விளம்பரங்களை தயாரிப்பதற்கு வசதியாக கோட்டையில் சிறப்பு ஒலிப்பதிவு அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
பேரவையில் வியாழக்கிழமை நடந்த செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், ‘‘அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகளை பண்பலை வானொலி (எப்.எம்.) மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வசதியாக, விளம்பரங்களை தயாரிக்க தலைமைச் செயலகத்தில் ரூ.37 லட்சம் செலவில் டிஜிட்டல் ஒலிப்பதிவு அரங்கம் அமைக்கப்படும்’’ என தெரிவித்தார்.