தமிழகம்

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை: எலான் மஸ்க், கிரிப்டோ தொடர்பான தகவல் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை @TNDIPRNEWS என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை கொண்டுள்ளது. இதில் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள், முதல்வரின் அறிவிப்புகள் உள்ளிட்டவைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கம் இன்று (ஜனவரி 1) ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகள், எலான் மஸ்க், கிரிப்டோ தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT