தமிழகம்

மன்மோகனை மையப்படுத்தி அம்புகளை எய்வது நியாயமில்லை: ஞானதேசிகன் பதில்

செய்திப்பிரிவு

நீதிபதிகள் நியமனங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு முன்வைத்துள்ள குற்றச்சாட்டில், பிரதமர் மன்மோகன் சிங்கை மையப்படுத்தி அம்புகளை எய்வது நியாயமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இரண்டு நாட்களாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் அதிகமாக பேசப்படுவது உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் பற்றி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு வெளியிடட் தகவல்களின் அடிப்படையில் பாரத பிரதமர் அந்த நீதிபதியின் கால நீட்டிப்பை அளிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்தும் கூட, தலையிட்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு துணை அதிகாரி சட்ட அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மையமாக வைத்து இன்றைக்கு முன்னாள் பிரதமர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அந்த கடிதத்தை எப்படி படித்தாலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீடு நதீமன்ற நியமனததில் இருந்ததற்கு எந்த ஆதாரமும் அதில் இல்லை.

நீதிமன்ற நியமனங்களில் அரசின் கருத்து பெறப்படுவது என்பது நடைமுறை வழக்கமாகும். அந்த கருத்து ஏற்புடையதாக இருக்கலாம், ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம்.

அந்த கருத்தை ஏற்பதா, ஏற்கக் கூடாதா என்ற அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளுக்குத்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த நியமனம் சம்மந்தமாக முன்னாள் பிரதமருக்கு சில கோரிக்கைகள் வருகிற போது ஏன் இந்த நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை என்று சட்ட அமைச்சரை கேடப்து நீதிமன்ற விவகாரத்தில் மன்மோகன் சிங் தலையிட்டதாக அர்த்தமல்ல என்பது அரசியலில் அரிசசுவடி படித்தவர்களுக்குக் கூட தெரியும்.

எந்தவித கோரிக்கை வைத்தாலும் அதனை பிரதமர், அமைச்சகம் சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்பது என்பது நடைமுறை மரபு சார்ந்த நிகழ்வாகும்.

அந்த குறிப்பிட்ட நீதிபதி மீது புகார் இருந்தால், அரசின் கருத்து எதுவாக இருந்தாலும் அதனை பரிசீலித்து சுயேட்சையாக முடிவெடுக்கும் கடமையும், அதிகாரமும் உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளைச் சார்ந்தது.

இந்த விவகாரத்தில் மன்மோகன்சிங் அவர்களை மையபப்டுத்தி அம்புகளை எய்வது எந்த வகையிலும் நியாயமில்லை.

வெறும் கடிதத்தை, அதுவும் அசோக்குமார் அவர்களை பரிசீலிகக் வேணடும் என்று கட்டளையிடப்படாத அநத் கடிதத்தை மையமாக வைத்து; மன்மோகன் சிங்கை காயப்படுத்துவது என்பது யாராலும் ஏற்க முடியாத செயலாகும்.

மோடி அரசு பதவியேற்ற 63 நாட்களுக்குள்ளேயே இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், உச்ச நீதிமன்றத்தில் அமித்ஷா வழக்கில் நீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப நீதிமன்றத்திற்கு உதவிய ஒரே காரணத்திற்காக அவருடைய நீதிமன்ற பரிந்துரையை நிராகாரித்த அரசு மோடி அரசு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீதிபதிகள் நியமனத்தில் இப்போதுள்ள நடைமுறையை மாற்றி, அதனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்தை மோடி அரசு மறைமுகமாக இந்த பிரச்சினைகளை கிளப்புகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT