தமிழகம்

தமிழ் இலக்கியத் துறையின் சிகரம் தொட்டவர் வண்ணதாசன்: தலைவர்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

தமிழ் இலக்கியத் துறையின் சிகரம் தொட்டவர் வண்ணதாசன் என தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

திருநெல்வேலி மண்ணுக்கு பெருமை சேர்த்துவரும் எழுத் தாளர் வண்ணதாசனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் படைப்பிலக்கியத் துறையின் சிகரம் தொட்ட வண்ணதாசனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள் கிறேன். ‘கல்யாண்ஜி’ எனும் புனைப்பெயரிலும் எழுதி வரும் அவர், தமிழ்க் கவிதை படைப் புலகிலும் தனித்தன்மையை நிலை நாட்டியவர். இவரது கவிதைத் தொகுப்புகள் காலத்தால் அழி யாதவை ஆகும். புதினங்கள், கட்டுரைகள், திறனாய்வுகள் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டாற்றி வரும் வண்ணதாசன் இலக்கியத் துறையில் மேன்மேலும் விருது கள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த செய்தியறிந்து பெரி தும் மகிழ்கிறேன். அவரது எழுத் தாற்றலுக்கு தேசிய அளவில் கிடைத்த அங்கீகாரம் இது. சாகித்ய அகாடமி விருது மூலம் தமிழுக்கும், தமிழகத்துக்கும், நெல்லை சீமைக்கும் அவர் பெருமை தேடித் தந்துள்ளார். அவரது எழுத்துகள் காலம் கடந்து நிற்கும் தன்மை கொண்டவை. எழுத்துலகில் மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது வாழ்க்கை அனுபவத்தில் சந்தித்த மக்களை கதை மாந்தர் களாக்கி, உண்மை பிரச்சி னைகளை களமாகக் கொண்டு சிறுகதைகளை வடித்தவர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர். முற் போக்கு இலக்கியங்கள் படைத்த தி.க.சி.க்கு கிடைத்த சாகித்ய அகாடமி விருது அவரது மகன் வண்ணதாசனுக்கும் கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழுக்கும், தமிழகத்துக்கும், நெல்லை சீமைக்கும் அவர் பெருமை தேடித் தந்துள்ளார்.

SCROLL FOR NEXT