தமிழகம்

விமான நிலையத்தில் 3 பேரிடம் 45 கிலோ தங்க நகைகள் சிக்கின

செய்திப்பிரிவு

மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று நேற்று காலை வந்தது. விமானத்தில் வரும் 3 பேர் தங்கம் கொண்டு வருவதாக முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

எத்திராஜூலு, அம்பீத், சச்சின் ஆகியோரின் சூட்கேசுகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது, அதில் ரூ.14.5 கோடி மதிப்புள்ள 45 கிலோ புதிய தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. சென்னையில் உள்ள நகைக் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக நகை களை எடுத்து வந்ததாக கூறிய அவர்கள், அதற்கான முறையான ஆவணங்களையும் காட்டினர். தகவல் அறிந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க நகைகளுக்கு வரி கட்டப்பட்டுள்ளதா என்று விசாரித்தனர். இறுதியில் எல்லாம் சரியாக இருந்ததால், அவர்கள் தங்க நகைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT