தமிழகம்

அரசியல் குறுக்கீடுகளை ஒதுக்கி பணியாற்ற வேண்டும்: புதிய தலைமைச் செயலாளருக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

அரசியல் குறுக்கீடுகளை விலக்கி புதிய தலைமைச் செயலாளர் பணியாற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டி ருக்கிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழக அரசில் நேர்மையான ஒருவர் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2007-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்று இதுவரை 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் தலைமைச் செய லாளராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு சுகாதாரத் துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட இவர், அதன்பின் முக்கியமான பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தார்.

இப்போது புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப் பதாலும், இன்னும் 30 மாதங்கள் இப்பதவியில் தொடர முடியும் என்பதாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் நேர் மையான நிர்வாகத்தை வழங்க அவர் பாடுபட வேண்டும். அரசி யல் குறுக்கீடுகளை விலக்கி தமிழ் நாடு அரசு இயந்திரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மாநில கண்காணிப்பு ஆணை யர் பதவியையும் கிரிஜா வைத்திய நாதன்தான் கவனித்துக் கொள்வார் என்பதால், கடந்த 10 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை, மின்சாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஆயத்தீர்வை, பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடந்த ஊழல்களை விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ள ராமமோகன ராவை உடனடியாக பணிநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT