தமிழகம்

சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 2 பேர் சென்னையில் கைது: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

ரூ.6 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வாங்கிக் கொடுத்த தாக சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபரு மான சேகர் ரெட்டி, உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோர் வீடுகளில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி, 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும்.

புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் வங்கி அதிகாரி களின் துணையுடன் அவர்கள் புதிய 2 ஆயிரம் நோட்டுகளை முறைகேடாக பெற்றது தெரியவந் தது. சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம்குமார், கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் பண மோசடிக்கு உதவி செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேகர் ரெட்டிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தாவை சேர்ந்த பரஸ்மால் லோதா என்பவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய 3 பிரிவுகளும் விசாரணை நடத்தி வருகின்றன.

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகியோர் சேகர் ரெட்டிக்கு ரூ.6 கோடியை மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. இருவ ரின் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத் தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் ஜனவரி 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுவரை இந்த வழக்கில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, ஆடிட்டர் பிரேம்குமார், ரத்தினம், ராமச் சந்திரன், அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT