கடந்த திங்களன்று வீசிய 'வார்தா' புயல் காரணமாக 10 ஆயிரம் மின்கம்பங்கள், 450 மின் மாற்றிகள், 4 துணைமின் நிலை யங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மின்விநியோகம் தடைபட்டது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்ததே இதற்குக் காரணம்.
இதையடுத்து, தடைபட்ட மின்விநியோகத்தை சீரமைக்க வெளிமாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். சென்னையில் மின் விநியோகம் சீரடைந்துள்ள நிலையில், திருவள்ளுவர் மாவட்டம் பழவேற்காட்டில் மின்கம்பங்களை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைக் காட்டுகிறது மேலேயுள்ள படங்கள்.
படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்