தமிழகம்

பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

செய்திப்பிரிவு

மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டதையடுத்து டெபிட், பேடிஎம் உள்ளிட்ட கார்டு கள் மூலம் மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரவணன் என்பவர் கூறும்போது, நான் பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ.200-க்கு பெட் ரோல் போட்டேன். அதற்கான பணத்தை என்னுடைய டெபிட் கார்டு மூலம் செலுத்தினேன். பின் னர் வீட்டுக்கு வந்த பிறகு எனக்கு ஒரு எஸ்எம்எஸ் தகவல் வந்தது. அதில் பெட்ரோல் போட்டதற்கு எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.211 பிடித்தம் செய்யப்பட் டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கார்டுகளுக்கு அதிகளவு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே சேவைக் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, டெபிட் கார்டு பயன்படுத்துவதற்கு சேவைக் கட்டணம் பொதுவாக வங்கிகளால் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 200 ரூபாய்க்கு 11 ரூபாய் சேவைக் கட்டணம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகள்தான் இதுபோல் அதிகளவு சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன’ என்றார்.

SCROLL FOR NEXT