தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை (cashless transaction) வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக வேளாண் விற்பனைக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ஏ.சங்கர் கூறியதாவது: விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 'இ.நம்' (Electronic. National agriculture market) என்ற இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் 100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் தேவையுள்ள வர்த்தகர்களைத் தொடர்புகொண்டு நல்ல விலைக்கு தங்கள் பொருட் களை விற்க ‘இண்டர்லிங்க் ஆஃப் ரெகுலேட்டர் மார்க்கெட்' என்ற முறையில் தமிழகத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக ரொக்க மில்லா பரிவர்த்தனை என்ற திட் டத்தை தமிழகத்தில் முதல்முறை யாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரும் ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதற்கான பணி களை தொடங்க வேளாண் விற் பனைக்குழு ஆணையர் உத்தர விட்டுள்ளார்.
கருத்து கேட்பு
இதன் மூலம் விவசாயிகள் விற் பனை செய்யும் பொருட்களுக்கான தொகை, விற்பனைக்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கான கூலி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி அனைத்தும் வங்கி கள் மூலம் அவரவர் கணக்கில் சேர்க்கப்படும். இதற்கான முதற் கட்ட கூட்டம் விவசாயிகள், வியாபாரிகளிடம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக் கப்பட்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப் பட உள்ளது. இதற்காக, ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கியின் விரிவாக்க மையம் மற்றும் ஏடிஎம் விரைவில் அமைய உள்ளது.
மேலும், எடை மற்றும் சுத்தி கரிப்பு, தரம் பிரிக்கும் இயந்திரமும் விழுப்புரம் ஒழுங்குமுறை விற் பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது. விவசாயி கொண்டுவரும் வேளாண் பொருட்களை இந்த இயந்திரத்தில் கொட்டினால் எலக்ட் ரானிக் மூலம் எடை போடப்பட்டு, சுத்திகரித்து, தரம் பிரிக்கப்பட்டு, அரசின் கோணிப்பையில் சேக ரித்து விற்பனைக்கு வைக்கப் படும். விலை நிர்ணயம் செய்யப் பட்டவுடன் விவசாயியின் கைப்பேசி எண்ணுக்கு விலை நிலவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
இதையடுத்து, குறிப்பிடப்பட் டுள்ள விலையை விவசாயி ஏற்றுக்கொண்டால், அப்போதே அவர் வீட்டுக்கு சென்றுவிடலாம். அவர் விற்ற பொருளுக்கான தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். விழுப் புரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றார்.