தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதி களுக்கான நேர்முக உதவியா ளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14,15 மற்றும் டிசம்பர் 7, 14, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்பதவிகளுக்கான நேர் காணல் தேர்வு ஜனவரி 10 முதல் 12-ம் தேதி வரை நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாகக் காரணங் களுக்காக நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்துசெய்தது. உறுப்பினர்கள் தலைமையில்தான் நேர்முகத் தேர்வு குழுக்கள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.