சூளகிரி அருகே 2,000 ஆண்டு களுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்களைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பெரியமலைக்கு எதிரில் உள்ள பசவண்ணகுட்டையில் உள்ள பெரிய பாறையில் 60 அடி உயரத் தில் நான்குகால் மண்டபம் உள் ளது. அதன் அருகில் கீழ்பக்கத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட பதினாறுகால் மண்டபம் உள்ளது. இங்கு உள்ள பாறைகளில், கிருஷ் ணகிரி மாவட்ட வரலாற்று மையத் தைச் சேர்ந்த சுகவன முருகன், செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2,000 வருடங்களுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.
பசவண்ணகுட்டை பாறையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள்.
இதுகுறித்து சுகவன முருகன், கூறும்போது, ‘‘பசவண்ணகுட்டை யில் உள்ள நான்குகால் மண்ட பத்தில் அரிய சிற்பங்கள் உள் ளன. கண்ணப்ப நாயனாரின் உரு வம், வளமைச் சடங்குகளைக் காட்டும் லஜ்ஜாகவுரி போன்ற 3 சிற்பங்கள், கன்றுடன் காமதேனு இருக்கும் சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. இக்கோயிலுக்கு அருகில் உள்ள பெரிய பாறைகளில் பாறைக் கீறல்கள் உள்ளன.
கோத்திப்பாறை எனப்படும் பாறையின் அடியில் இருக்கும் சிறிய தளத்தில் தரைப் பகுதி யில் இரண்டு பாறைக் கீறல் ஓவியங்கள்(பெட்ரோகிளீப்) வரை யப்பட்டுள்ளன. விதானப் பகுதி யில் வேட்டைக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
மாட்டின் முன் கால் தூக்கிய நிலையில் இருக்கிறது. இவை 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்களாகும். இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் பெருங்கற்கால பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன’’ என்றார்.