கோப்புப் படம் | 
தமிழகம்

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியில் உச்சங்களை அடைவோம்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியில் உச்சங்களை அடைவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய உழவர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு தேசிய உழவர் நாள் வாழ்த்துகள். குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது.சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT