தமிழகம்

அடுத்த ஆண்டு ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்: தமிழக அரசு முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: அடுத்த ஆண்டு ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள 4600 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த ஏதுவாக 5 ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடையும் கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT