தமிழகம்

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரிடம் மனு பெற்ற காவல் அதிகாரிகள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,604 பேரிடம் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையரகங்கள், காவல் மாவட்டங்களில் வாரத்துக்கு ஒருமுறை புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 9 காவல் ஆணையரகங்களிலும், 37 காவல் மாவட்டங்களிலும் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் நேரடியாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,604 புகார் மனுக்கள் பெறப்பட்டன. டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்கள் 52 பேரிடமும், காவலர்களிடமும் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT