தமிழகம்

ஆட்சியர் அலுவலகங்கள் முன் 28 முதல் காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் வரும் 28-ம் தேதி தொடங்கும் தொடர் காத்திருப்பு போராட்டம், கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் வரும் 28-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் நிர்வாகிகள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், கே.ரங்கசாமி, விவசாய சங்க நிர்வாகிகள் ஜி.சுந்தர மூர்த்தி, வி.எஸ்.கலிய பெருமாள், ஆர்.குமாரராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி னார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியது:

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும் பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலங் களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிர மும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் வரும் 28, 29, 30-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின்போது அனைத்து கட்சிகளையும் ஒருங்கி ணைத்து பெரிய அளவில் போராட் டம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட் டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT