வார்தா புயல் தாக்கி ஒரு வாரத் துக்கு மேலாகியும் மின் விநியோ கம் சீரடையாததால் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள கிராம மக்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தின் வட மாவட்டங் களில் கடந்த 12-ம் தேதி வீசிய வார்தா புயலால் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளுவர் மாவட்டங் களில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் இந்த 3 மாவட்டங்களிலும் பல இடங்களில் மின்சாரம் துண் டிக்கப்பட்டது. குடிநீர் இன்றியும், மின்சாரம் இன்றியும் பல நாட் களாக மக்கள் தவிக்கின்றனர்.
புயல் வீசி 9 நாட்கள் ஆன நிலையில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும் புதூர் தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் 9 நாட்களாக மின்விநியோகம் சீரடையாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு, இரவில் தூங்க முடியாத அவதி, கொசுத் தொல்லை ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் அரை யாண்டு தேர்வுக்கு படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் தங்களது பயிர்களை முறையாக பராமரிக்க முடியாமல் கவலையடைந்துள்ளனர்.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் பாதிப்பை சீரமைப்பதற்காக 5 பேர் கொண்ட அமைச்சர் குழுக்கள் அமைக்கப் பட்டன. அமைச்சர்களும் பல் வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் பல பகுதிகளில் நிலைமை சீரடையவில்லை.
இதுதொடர்பாக ஆதனூர் கிராம மக்கள் காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித் தனர். இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ஒருவர் கூறும் போது, “சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மின் கம்பம் நடும் பணிக்கு தேவையான ஜே.சி.பி., கிரேன் போன்றவற்றின் பற்றாக்குறையினால் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நிலைமை சீராகும்” என்றார்.