தமிழகம்

கோவில்பட்டி அருகே பேருந்து - கார் மோதல்: கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்த கீர்த்திக் (22), விருதுநகர் மாவட்டத்தில் உள்ளதனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது நண்பர்களான வெயிலுகந்தபுரம் செந்தில்குமார்(24), நாலாட்டின்புதூர் அஜய்(23), வீரவாஞ்சி நகர் அருண்குமார் (21), சாத்தூர் ஓ.மேட்டுப்பட்டி விக்னேஷ் (23) ஆகியோருடன் காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

இளையரசனேந்தல் கிராமத்தை அடுத்த பாலத்தில் வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்தும்,காரும் நேருக்கு நேர் மோதின. இதில் கீர்த்திக், செந்தில்குமார், அஜய், விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

அருண்குமார், காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் பேருந்தில் பயணித்த பிள்ளையார் நத்தம் மாடசாமி(62) கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவில்பட்டி மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT