தமிழகம்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பை நிறுத்தியது ஆந்திரா அரசு

செய்திப்பிரிவு

‘வார்தா’ புயல் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுகிறது. கடந்த அக்டோபர் 10-ம் தேதி கண்டலேறு கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு தண்ணீர் திறந்தது.

கடந்த மாதம் 7-ம் தேதி நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, 9-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், ‘வார்தா’ புயல் காரணமாக கடந்த 12-ம் தேதி முதல், ஆந்திர அரசு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது.

மழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக் கான நீர் மிக குறைந்தளவிலேயே எடுக்கப்படுகிறது. நாளடைவில் இது அதிகரித்தால், கிருஷ்ணா நீரும் நிறுத்தப்பட்ட நிலையில், பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறைய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT