தமிழகம்

சென்னை-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கும்மிடிப்பூண்டி அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் கும்மிடிப்பூண்டி-எலாவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது ஏ.சி. பெட்டி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கும்மிடிப்பூண்டிக்கு விரைந்தன.

இவ்விபத்து குறித்து ரயில்வே ஐஜி அஷ்ரஃப் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இந்த தீ விபத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு, ரயில் கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்டு, தீவிர பரிசோதனைக்கு பின் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்படும்” என்றார்

SCROLL FOR NEXT