மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடு வதுடன், அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க நீதிமன் றமே ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று 2 வழக்கறிஞர்கள், பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த வழக் கறிஞர்களான ஆர்.கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏ.வீரமணிகண்டன் ஆகியோர் பிரதமர், உள்துறைச் செயலர், சிபிஐ இயக்குநர், தமிழக ஆளுநர் மற்றும் தமிழக ஊழல் கண்காணிப்பு எஸ்பி ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் அதிமுக வழக்கறிஞர் கள். மறைந்த முதல்வர் ஜெய லலிதா தமிழக மக்களின் ஏகோ பித்த செல்வாக்கைப் பெற்றவர். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. அவருக்கு சொந்தமாக போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது முதல் அவரை வெளிநபர் கள் யாரும் பார்க்க அனுமதிக்கப் படவில்லை. குறிப்பாக மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர் கூட சசிகலா குடும்பத்தினரையும், மாநில அமைச்சர்களையும்தான் சந்தித்து திரும்பியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது. அவருக்குப் பிடிக்காத துரோகிகளால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டு இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டவர் இறுதியில் இறந்துதான் வீடு திரும்பியுள்ளார். எனவே அவரது மரணம் குறித்து மருத்துவ மனையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், டெலிபோன் உரையாடல்கள், அவரை சந்தித்து வந்த மத்திய அமைச்சர்கள், அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் மற்றும் உளவுத் துறை போலீஸாரிடம் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் இதயத்தில் வாழ்ந்த ஜெயலலிதா, ஒட்டுமொத்த தமிழக மக்களின் அரசியாக திகழ்ந்தவர். இரும்பு பெண்மணியாக திகழ்ந்த அவரது நிர்வாகத் திறமையால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங் களான ஆந்திரம், கர்நாடகாவிலும் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் விடு விக்கப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய் துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ரத்த சம்பந்த மான வாரிசுகளோ, அரசியல் வாரிசுகளோ கிடையாது. இந்த சூழலில் அவருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகிக்க நீதிமன்றமே ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அத்துடன் அவரது மர்ம மரணம் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியுள்ளனர்.