கார்த்திகை மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14 நாட்களாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலை உச்சியில் நேற்று முன்தினம் மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
வார்தா புயல் தாக்கத்தால், திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து மழை கொட்டியது. அதனைப் பொருட் படுத்தாமல் மழையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழா கிரிவலத்தை தொடர்ந்து, பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. காலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அதன் பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப் பாதையில் நேற்றும் ஆங்காங்கே மழை பெய்தது. மழையில் நனைந்தபடியே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் சென்ற பக்தர்கள்.