சென்னையில் நடந்த மதிமுக மாணவரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாநிலச் செயலாளர் பால சசிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

உதயநிதியை துணை முதல்வராக நியமித்தாலும் வரவேற்போம்: துரை வைகோ கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: மதிமுக மாணவர் அணி மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் துரைவைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

‘சமூக ஊடகங்கள் வழியாக கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மாநில ஆளுநர் பதவிகள் நீக்கப்படவேண்டும். ஐஐடி போன்ற மத்தியஉயர்கல்வி நிறுவன பணியிடங்களில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்’ என்பது உட்பட இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது: நம் நாட்டில் ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று. தாங்கள் ஆட்சிசெய்யாத மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு மத்திய அரசு இடையூறு செய்கிறது. மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு மதிமுக தயாராகி வருகிறது. இத்தேர்தலிலும் திமுக உடனான எங்கள்கூட்டணி தொடரும்.வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை. திறமை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். எனவே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதில் எந்த தவறும் இல்லை. அடுத்து அவரை துணை முதல்வராக நியமித்தால், அதையும் வரவேற்போம் என்றார்.

SCROLL FOR NEXT