தமிழகம்

அப்போலோவில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் உடல்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 136 எம்எல்ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கட்சித் தலைமையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூடினர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.

இதனையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய நோய் நிபுணர்கள், சுவாசயியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.

SCROLL FOR NEXT