மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்களை சீராக இயங்க வைப்பதற்கான சிகிச் சையை தொடர்ந்து அளிக்க வேண்டும் என மயக்க மருந்து மருத்துவர்கள் மாநாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் தீப்தி தெரிவித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) மயக்க மருந்து மருத் துவத்துறை சார்பில் ‘’மயக்க மருந்து மருத்துவர்களுக்கான மாநாடு’’ சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவக் கல்வி இயக்குனர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து டாக்டர்கள் பேசினர்.
மூளைச்சாவு அடைந்தவர் களை கையாளும் முறைகள் மற்றும் அவற்றில் உள்ள சவால் கள் பற்றி சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும், மயக்க மருந்து மருத்துவருமான தீப்தி பேசியதாவது:
உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆனால் உடல் உறுப்பு தானம் குறைவாக உள்ளது. காத்திருக் கும் காலத்திலேயே நிறைய பேர் உயிரிழந்து விடுகின்றனர். மூளைச்சாவு அடைந்தவருக் கும், சாதாரண நோயாளிக ளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
விபத்துகளில் சிக்கி தலையில் காயம் அடைந்தவருக்கு முதல் கட்டமாக, அவரது உயிரை காப் பாற்ற தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி ஒரு வேலை சிகிச்சை அளித்தும் பலன் அளிக் காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டால், அவருடைய உடலில் உள்ள இதயம், சிறு நீரகம், கல்லீரல் போன்ற உறுப்புக் களை சீராக இயங்க வைக்க தேவையான சிகிச்சையை தொடர வேண்டும்.
அப்போது தான் உறுப்புகள் செயலிழப்பதை தடுக்க முடியும். உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு பொருத்த முடியும். வெளிநாடுக ளில் மூளைச்சாவு அடைந்து விட்டால், உடனடியாக அவருக்கு வைக்கப்பட்டுள்ள செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை அகற்றி விடுகின்றனர். ஆனால், அதுபோல நாம் செய் வதில்லை.
ஒருவர் விபத்தில் சிக்கும் போது, அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறது. இதன் மூலம், அவரது உடல் உறுப்பு களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. ரத்த ஓட்டம் இல்லாததால், உடல் உறுப்புகள் செயலிழக்க நேரிடும்.
அதனால் முதல் கட்டமாக விபத்தில் சிக்குபவரின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தப் போக்கை உடனடியாக துணி போன்றவற்றை வைத்து தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான், உடல் உறுப்புகள் செயலிழப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.