மின்சாரம் முழுமையாக விநியோகிக் கப்படாததால் குடிநீருக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கேன் தண்ணீர் ரூ.100-க்கு விற்கப் படுகிறது.
புறநகர் பகுதிகளில் சில இடங்களில் குடிநீர் விநியோகிக் கப்படாததால் பொதுமக்கள் காலி குடத்துடன் தண்ணீரைத் தேடி அலைந்தனர். இதைப் பயன் படுத்தி கடைக்காரர்கள் ஒரு கேன் தண்ணீரை ரூ.100 வரை விற்கின்றனர். இது குறித்து கடைக்காரர் ஒருவர் கூறியதாவது: சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேனில் அடைத்து விற்கும் நிறுவனங்கள் சாதாரண நாட்களில் எங்களுக்கு ஒரு கேன் ரூ.10-க்கு வழங்கும். நாங்கள் ரூ.25-க்கும் ஒரு கேனை விற்பனை செய்வோம். தற்போது மின்சார தட்டுப்பாடு காரணமாக கேன் தண்ணீர் எங்களுக்கு கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
பல நிறுவனங்கள் கிராமப் புறங்களில் இருக்கின்றன. அங்கு இன்னும் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஜெனரேட்டரை பயன்படுத்து கின்றனர். இதன் காரணமாக கூடுதல் விலைக்கு தண்ணீர் கேன்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் சீராகும் பட்சத்தில் விலையும் சீராகும் என்றார்.