தஞ்சாவூர்: தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் தரமானதாக இல்லை. குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டு களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு குண்டு, வட்டு ஆகியவை கார்பன் கலந்த ரப்பராக உள்ளன.
தொடர் ஓட்டத்தில் பயன்படுத்தப்படும் சிறிய பைப் போன்ற அலுமினியம் மற்றும் ஈட்டி எறிதலுக்கு பயன்படுத்தப்படும் ஈட்டி போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளன. பல பொருட்கள் உடைந்துள்ளன. இதை வைத்து மாணவர்கள் பயிற்சி செய்ய முடியாது.
எனவே, இந்தப் பொருட்கள் அனைத்தையும் திரும்ப பெற்று, தரமான இரும்பால் ஆன பொருட்களை வழங்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.