ஒகேனக்கல்லில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை யடுத்து நேற்றும் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டி ருந்தது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் லுக்கு கோடை விடுமுறை காலத் திலும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் சுற்றுலாப் பயணி களின் வரத்து அதிகமிருக்கும்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அங் கிருந்து உபரி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. இதுபோல கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற சில அணைகளும் நிரம்பி வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த தண்ணீர் வியாழக்கிழமை மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை எட்டியது. அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் மறுநாள் காலையில் 20 ஆயிரம் கன அடியை கடந்தது. எனவே வெள்ளிக்கிழமை காலை முதலே ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றிலும், அருவியிலும் குளிக்க வும் தடை விதிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை நீர்வரத்து 18 ஆயிரம் கன அடி யாக இருந்தது. சனிக்கிழமை விநாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீரும், நேற்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடிக்கு குறையாமலும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் ஓரம் வசிப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு குறித்த தகவல் அறியாமல் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் கரையில் இருந்தபடியே ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி ஆற்றை ரசித்துவிட்டு திரும்பினர்.