தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இழப்பீடு வழங்காததால் பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு அவமதிப்பு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதி மன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் நடந்தது. இதில் 94 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தனர். இதில் இறந்த மற்றும் காய மடைந்த குழந்தைகளின் பெற் றோருக்கு இழப்பீடு வழங்குவதற் காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் கமிஷன் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கை தாக்கல்

இதன்படி நீதிபதி கே.வெங்கட் ராமனும் இழப்பீட்டை நிர்ணயம் செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின்படி இழப்பீடு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறையும் சம்மதம் தெரிவித்தது.

4 வாரங்களில்..

பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது வங்கிக் கணக்குகளை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த விவரங்கள் கிடைத்த 4 வாரங்களில் இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கடந்த அக்டோபர் 27-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் விதித்த 4 வார காலக்கெடு நவம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இன்னும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வில்லை என்பதால் குழந்தை களின் பெற்றோர் சார்பில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா ளர் சபீதா மற்றும் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT