தமிழகம்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மணல் குவாரிகளில் பெற நடவடிக்கை: லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

மணல் குவாரிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலை வர் எஸ்.யுவராஜ், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணல் குவாரிகளில் பழைய நோட்டுகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகளில் விலை குறிப்பிடப்படாமல் ரசீது வழங்கப்படுகிறது. இதனால், எங்கள் பணத்துக்கான முதலீடு குறித்து வருமான வரி தணிக்கைக்கு முறையான ஆவணம் சமர்ப்பிக்க முடியவில்லை.

எனவே, மணலுக்கான தொகையை ரசீதில் குறிப்பிட உத்தரவிட வேண்டும். அதிக பாரம் ஏற்றப்படுவதைத் தடுக்க தமிழக அரசின் 34 மணல் கிடங்குகளி லும் எடை மேடைகள் அமைக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானா உள்ளிட்ட மற்ற மாநிலங் களைப்போல ஆன்லைன் அல்லது டிடி மூலமாக தொகையைப் பெற்று மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச் சாவடிகளில் கட்டணமின்றி செல்லும் வசதியை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்க வேண்டும்.

மணல் கடத்தலைத் தடுக்க லாரி களுக்கு தனி வண்ணம், ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் இருப்பு அதிகமுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடை யை நீக்க வேண்டும். இக்கோரிக்கை களை டிசம்பர் 9-ம் தேதிக்குள் நிறைவேற்றித் தரவேண்டும். மேலும், அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டு செல்ல டிசம்பர் 12-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

SCROLL FOR NEXT