தமிழகம்

செங்கல்பட்டில் திமுக பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டில் கொலை செய்யப் பட்ட திமுக பிரமுகர் வில்சனின் உடலை வாங்க மறுத்து, உறவினர் கள் மறியலில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. கொலையாளி களைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராம் மிஷன் தெருவைச் சேர்ந்தவர் வில்சன் (எ) கலையரசன்(45). திமுக மாவட்ட பிரதிநிதி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். வல்லம் ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வில்சன் செங்கல்பட் டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே வந்த போது மர்ம கும்பல் ஒன்று காரில் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்தி லேயே வில்சன் இறந்தார். இறந்த வில்சனுக்கு ரூபி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

4 தனிப்படை அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப் பாளர் முத்தரசி கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். கொலை யாளிகளை பிடிக்க 4 தனிப்படை களை அமைத்து உத்தரவிட்டார். செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக் கின்றனர். செங்கல்பட்டு துணை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் போலீஸார் கொலை யாளிகளைத் தேடுகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பிரச் சினையால் கொலை நடந்திருக் கலாம் என்ற கோணத்தில் 11 பேரி டம் விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே வில்சன் படு கொலையைக் கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் ஜி.எஸ்.டி சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரின் பேச்சுவார்த்தையை அடுத்து, வில்சனின் உறவினர்கள் மறியலைக் கைவிட்டு உடலைப் பெற்றுச் சென்றனர். செங்கல்பட்டு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT