காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் இந்திய கணினி சங்கத்தின் மாணவர் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.எஸ்.விஷ்ணு போத்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார் இந்திய கணினி சங்கத்தின் தலைவர் எச்.ஆர்.மோகன் கலந்து கொண்டு சங்கத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பல்கலைக் கழக மேம்பட்ட கணினி மைய இயக்கு நர் எஸ்.ராஜலட்சுமி, துறைத் தலைவர் வசந்த்குமார் மேத்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.