தமிழகம்

திருநின்றவூர், நெமிலிச்சேரியில் நீடிக்கும் புயல் பாதிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருநின்றவூர் மற்றும் நெமிலிச்சேரி பகுதிகளில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு களை சீரமைக்க 2 நாட் களாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதிகளில் புயலால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. மழைநீரும் தேங்கியதால், பல இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

நெமிலிச்சேரி

பிரகாஷ் நகர், அம்பாள் நகர், அன்னை இந்திரா நகர் மற்றும் நெமிலிச் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாத் நகர், நடுகுத்தகை ஊராட்சி பகுதிகள் ஆகியவற்றில் 40-க்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.

எனினும், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அம்பாள் நகர், நாத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மின்விநியோகம் இல்லாததால் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். அப்பகுதியில், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. கேன் குடிநீர் மற்றும் பால் விலையும் உயர்ந்துள்ளதாக பகுதி மக்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT