தமிழக அரசியலில் வெளிப் படைத்தன்மை இல்லாததாலேயே, தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப் படை நுழைந்தது என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தி யாளர்களிடம் நேற்று அவர் கூறிய தாவது:
2017-ம் ஆண்டில் இருந்து முழுநேர அரசியல் இயக்கமாக லட்சிய திமுக செயல்படும். இனி, சினிமாவில் 35 சதவீதமும், அரசியலில் 65 சதவீதமும் கவனம் செலுத்தவுள்ளேன். மாவட்டந்தோறும் கட்சியை வலுப்படுத்துவேன். காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி சேரவே மாட்டேன்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளேன். வெற்றி- தோல்வி குறித்து எனக்கு கவலையில்லை. தேர்தலில் வெற்றி பெற்றால் சங்கப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமமோகன ராவ் அரசு அதிகாரியா அல்லது அரசியல்வாதியா என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசியலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தாலேயே, தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப் படை நுழைந்தது. தமிழகத்தில் பலம் இல்லாததைப் பயன்படுத்தி, சிலர் அரசியலில் நுழைய முயற்சிக்கின்றனர்.
காவிரி விவகாரத்தில் விவசாயிகளுடன் இணைந்து லட்சிய திமுக போராடும் என்றார் ராஜேந்தர்.