தமிழகம்

மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

கோயில், சர்ச், மசூதி போன்ற மத வழிபாட்டுத் தலங்களின் உள்ளே சட்டவிரோதமாக மற்றொரு நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், இதுபோன்ற காரியங்களி்ல் ஈடுபடுவோர் மீது போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத் தில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் லண்டனில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளேன். என் னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். அவரை சேர்த்து வைக்கக்கோரி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்- கவுன்சிலில் முறையிட்டேன். அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை நான் விவகாரத்து செய்து விட்டதாக கையெழுத்து வாங்கினர். இந்த ஷரியத்- கவுன்சிலால் என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுபோல பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக ஷரியத் கவுன்சில் என்ற பெயரில் முஸ்லீம் ஜமா-அத்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது.

இவ்வாறு ஜமா-அத்களில் ஷரியத்- கவுன்சில் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லீம் மக்கள் தங்களது குடும்ப பிரச்சனைகளை இந்த ஷரியத்- கவுன்சிலில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமா-அத் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

முஸ்லீம் திருமணம் தொடர் பான விவாகரத்துகளில் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப் படுகிறது. சொத்துப் பிரச்சனை களிலும் கூட இவர்கள்தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான ஏழை, எளிய குடும் பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பெண்கள் தங் களின் வறுமை காரணமாக இது போன்ற கட்டப் பஞ்சாயத்து களின் முடிவை எதிர்த்து நீதி மன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமா-அத்களில் ஷரியத்- கவுன்சில் என்ற பெயரில் நீதி மன்றங்கள் போல செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன் ஆஜராகி வாதிட்டார்.

திருவல்லிக்கேணி போலீஸ் துணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ ஷரியத்-கவுன் சில் மசூதிக்குள் செயல்படு வதால், உள்ளே சென்று கண் காணித்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை’’ என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில், சர்ச் மற்றும் மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களின் உள்ளே சட்டவிரோதமாக மற்றொரு நீதிமன்றம் செயல்படு வதை ஏற்க முடியாது. மனுதாரர் தனது மனுவில், ஷரியத்- கவுன் சிலின் செயல்பாடுகள் அனைத் தும் ஒரு நீதிமன்றம் போலவே உள்ளதாக தனது ஆவணங்களின் மூலம் கூறியுள்ளார். வழிபாட்டுத் தலங்களில் இறை வழிபாடுதான் நடக்க வேண்டும். போலீஸ் அதிகாரியின் பதில் மனு ஏற்கும் படியாக இல்லை. எனவே போலீஸார் வழிபாட்டுத் தலங் களில் இதுபோன்ற சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 19-க்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT