தமிழகம்

ஆம் ஆத்மி கட்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: ஆம் ஆத்மி கட்சி, தேசியக் கட்சி அங்கீகாரத்தை பெற்றதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் ட்விட்டர் பதிவில், ``டெல்லி,பஞ்சாப், கோவா மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி தனது தடத்தை பதித்துள்ளது.

குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கும், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாராட்டுகள்'' என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT