தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT