அமைச்சர் எவ வேலு | கோப்புப் படம் 
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் சேவை தமிழகத்துக்கும், திமுகவுக்கும் அவசியம் தேவை: அமைச்சர் எ.வ.வேலு

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழகத்துக்கும், திமுகவுக்கும் அவசியம் தேவை என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத் தில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று பெரம்பலூருக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில்களில் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து கட்சியின் வெற்றிக்குபாடுபட்டார்.

அவரது பிரச்சாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 2 தேர்தல்களில் சிறப்பாகச் செயல்பட்டு, தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை, தமிழகத்துக்கும் மற்றும் கட்சிக்கும் அவசியம் தேவை.

பெரம்பலூர் முதல் அரியலூர் வரையிலான நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நிகழ்வதால், அந்தச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்பேரில், நான்குவழிச் சாலையாக மாற்றுவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்ததும், சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கும்.

தமிழகம் முழுவதும் 69 தொழிற்பயிற்சி நிலையங்களில், புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைப்பதற்காக தமிழக முதல்வர்ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி யுள்ளார். பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் தலாரூ.3.73 கோடி வீதம் மொத்தம்ரூ.7.46 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நவீன தொழில் நுட்பப் பயிற்சிக்காக தலா 8 இயந்திரங்கள் கொண்ட ஆய்வக கூடமும், 4 வகுப்பறைகளும், சர்வர் அறை மற்றும் அலுவலர்கள் அறை ஆகியனவும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த மாதத்துக்குள் நிறைவடையும் என்றார்.

SCROLL FOR NEXT