சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: புயல் கரையை கடந்தபோதும் சென்னை வீதிகளில் மழை வெள்ளம் தேங்காமல், போக்குவரத்து தடையின்றி இயங்கியது. மின்சாரம் பெருமளவு தடையின்றி கிடைத்தது.
ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் கடுமையான புயல் காற்றிலும், தொடர் மழையிலும் சாலைகளில் இறங்கி களப்பணியாற்றியது ராணுவ வீரர்களை நினைவூட்டியது.
மேன்டூஸ் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் சமாளித்த தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விவசாயிகளுக்கு போதுமான நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.